உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் - யமுனோத்ரி நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தபோது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில், பல மீட்புக்குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் மற்றும் தேசிய மீட்புப் படையினர் உள்ளிட்டோர் இரவு, பகலாக முயற்சி செய்தனர். இறுதியாக, தீவிரமான முயற்சியால் கடந்த நவ.28 ஆம் தேதி சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி இருந்த 41 தொழிலாளர்களை தேசிய மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
இந்த நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை எனவும் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து சுரங்கத்தின் கட்டுமான நிறுவன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கூறவில்லை.