டெல்லி : நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சார் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக சோனியாக காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கரோனா காரணமாக சோனியா காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலன் குறித்த செய்திகள் வெளியாகி வேகமாக பரவின.