டெல்லி :ராகுல் காந்தி பிளையிங் கிஸ் (flying kiss) கொடுத்ததாக கூறப்படுவது அவை சிசிடிவியில் தெளிவாக பதிவாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவையில் நேற்று (ஆகஸ்ட். 9) நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். உரையை முடித்த போது அவையில் இருந்த பாஜக தலைமையிலான பெண் எம்.பிக்களை நோக்கி ராகுல் காந்தி flying kiss கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி பெண் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, "நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ள போது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பது பெண் மீது வெறுப்பு கொண்ட நபரால் மட்டுமே முடியும்.
இதற்கு முன் இது போன்ற கண்ணியம் மற்ற நடத்தையை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் நான் பார்த்தது இல்லை என்று கூறினார். மற்றொரு பெண் உறுப்பினரான சோபா கரண்தலஜே, ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறும் முன் அனைத்து பெண் உறுப்பினர்களுக்கும் சேர்த்தார் போல் flying kiss கொடுத்து விட்டு சென்றார்.
இது அநாகரீகமான செயல், ஒரு உறுப்பினரின் ஒழுங்கீனமான செயல் என்று தெரிவித்தார். ராகுல் காந்தி flying kiss கொடுத்ததாக எதிர்ப்பு தெரிவித்த பெண் உறுப்பினர்கள் அதுகுறித்து மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி flying kiss குறித்து மக்களவையில் உள்ள சிசிடிவிகளில் உள்ள காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள் முழுவதையும் ஆராய்ந்த போது, ராகுல் காந்தி முத்தம் கொடுததாக கூறப்படுவது தெளிவாக சிசிடிவியில் பதிவாகிவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி flying kiss கொடுத்ததாக பெண் உறுப்பினர்கள் கொடுத்த புகாரில் முக்கிய சாட்சியாக சிசிடிவி காட்சிகள் கோரப்படன. தற்போது அந்த சிசிடிவியில் ராகுல் காந்தி, flying kiss கொடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் திரெளபதி பற்றி பேசுகிறார்கள்.. தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன்!