தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2024 நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி.. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நீக்கம்! கர்நாடக தலைவராக நியமனமா? - கர்நாடக பாஜக தலைவர்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவில் தேசிய அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி தேசிய பொதுச் செய்லாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம் சி.டி.ரவி கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

BJP
BJP

By

Published : Jul 29, 2023, 8:53 PM IST

ஐதராபாத் : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற 5 மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு பாஜகவில் தேசிய அளவிலான மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாஜகவில் 13 தேசிய துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள், மற்றும் 13 தேசிய செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் விரைவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் வர உள்ளன. இதையடுத்து தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளை மாற்றி புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டு உள்ளார்.

அதன்படி தெலங்கானாவை சேர்ந்த சஞ்சய் பந்தி மற்றும் சுனில் பன்சல் ஆகியோர் தேசிய பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார். அதேநேரம் தேர்தல் வியூகங்கள் குறித்த நடவடிக்கைகளை இருவரும் கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மகன் அனில் அந்தோனிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

மற்றபடி புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள பொறுப்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்ட முன்னாள் கோரக்பூர் எம்.எல்.ஏ ராதா மோகன் அகர்வால் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதேநேரம் தமிழக பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி பதவியிறக்கம் செய்யப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான சி.டி. ரவி, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், கர்நாடக பாஜகவுக்கு நிலையான தலைவர் இல்லாத நிலையில், கர்நாடக பாஜக தலைவராக சி.டி. ரவி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதன் காரணமாக தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் மூத்த தலைவர்கள் கைலாஷ் விஜய்வர்கியா, தருண் சுக், வினோத் தாவ்டே மற்றும் அருண் சிங் ஆகியோர் மீண்டும் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க :இம்பால் விரைந்த INDIA கூட்டணியின் பிரதிநிதிகள் குழு.. கலவரம் பாதித்த இடங்களில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details