தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தில் சிக்கிய இளைஞரை சுமந்து சென்று காப்பாற்றிய சோனு சூட் - இளைஞரை மீட்ட சோனு சூட்

பஞ்சாப்பில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை நடிகர் சோனு சூட் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sonu Sood rescues 19-year-old accident victim
Sonu Sood rescues 19-year-old accident victim

By

Published : Feb 9, 2022, 4:44 PM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மோகா சாலையில் நள்ளிரவில் நடிகர் சோனு சூட் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது சாலையில் இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட சோனு சூட் உடனடியாக காரை நிறுத்தி, விபத்து ஏற்பட்ட காரின் உள்ளே சிக்கியிருந்த இளைஞரை மீட்டார்.

இளைஞர் மயக்க நிலையில் இருந்தததால், சோனு சூட் தனது கார் வரையிலும் இளைஞரை சுமந்து சென்று, மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நலமாக உள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. நடிகர் சோனு சூட்டின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:மீட்கப்பட்ட இளைஞர்: முத்தமிட்டு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சி தருணம்!

ABOUT THE AUTHOR

...view details