ஹரியானா மாநிலம் சோனிப்பேட்டைச் சேர்ந்த நிஷா என்ற மல்யுத்த வீராங்கனை அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
நிஷா தனது தாயார் தன்பதி, சகோதரர் சூரஜ் ஆகியோருடன் இருந்தபோது இந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நிஷா அவரது சகோதரர் சூரஜ், இருவரும் சம்பவயிடத்தில் உயிரிழந்தனர். தாயார் தன்பதி ரோத்தக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக சோனிப்பேட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.