நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை ஜூலை 19 தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது நாடாளுமன்ற குழுவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, காங்கிரஸ் மக்களவை கட்சி தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்திரி நீடிக்கிறார். மக்களவை கட்சி துணைத் தலைவராக கௌரவ் கோகாய், தலைமை கொறடாவாக கே. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை குழுவில் மனீஷ் திவாரி, சஷி தரூர், ரவ்னீட் சிங், மாணிக்கம் தாகூர் ஆகியோர் உள்ளனர்.
அதேப்போல் மாநிலங்களவை கட்சித் தலைவராக மல்கார்ஜுன கார்கே உள்ளார். துணைத் தலைவராக ஆனந்த் சர்மா, தலைமை கொறடாவாக ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். மாநிலங்களவை குழுவில் அம்பிகா சோனி, ப சிதம்பரம், திக்விஜய சிங், கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, கோவிட்-19 பெருந்தொற்று, ரபேல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:மண்டேலா: இனத்தின் உரிமைக் குரலாக ஒலித்த 'கருப்பின காவலன்'