டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் அக்டோபர் 13ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார்.
முன்னதாக அவர், மருத்துவமனையின் கார்டியோ-நியூரோ மையத்தில் உள்ள தனியார் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான இருதயநோய் நிபுணர்கள் குழுவின் கீழ் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
அவர் சிகிச்சை பெற்றுவந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் சந்தித்தனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய அவரை வாழ்த்தியுள்ளார்.