தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா காந்தி ராய் பரேலி மாவட்ட நீதிபதிக்கு கடிதம் - sonia writes Raebareli DM

தொகுதி நிதியைக் கொண்டு ராய் பரேலி மக்களை கோவிட் -19 தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தி ராய் பரேலி மாவட்ட நீதிபதிக்கு கடிதம்
சோனியா காந்தி ராய் பரேலி மாவட்ட நீதிபதிக்கு கடிதம்

By

Published : Apr 24, 2021, 10:34 PM IST

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

கரோனாவால் 3.46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,624 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராய் பரேலி மாவட்ட நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "எனது தொகுதி நிதியில் ரூ .117.77 கோடி மீதமுள்ளது. அதனை, ராய் பரேலி தொகுதி மக்களை கோவிட் -19 தொற்றில் இருந்து காப்பாற்ற பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கோவிட் -19 தடுப்பூசி குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

மேலும் தடுப்பூசி போடுவது கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் சவால்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மே மாதத்தில் கோவிட் -19 நாட்டைத் தாக்கும் என்று கணித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல் - தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்

ABOUT THE AUTHOR

...view details