தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2ஆம் கட்ட விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜர் - நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கின் 2ஆம் கட்ட விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார்.

sonia-gandhi-appears-before-ed-for-second-round-of-questioning-in-money-laundering-case
sonia-gandhi-appears-before-ed-for-second-round-of-questioning-in-money-laundering-case

By

Published : Jul 26, 2022, 11:45 AM IST

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் 2ஆம் கட்ட விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (ஜூலை 26) டெல்லியின் ஏபிஜே அப்துல் கலாம் சாலை அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இவருடன் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர்.

இதில் ராகுல் சிறிது நேரத்தில் கிளம்பிய நிலையில், பிரியங்கா அலுவலகத்திலேயே உள்ளார். சோனியா காந்தியிடம் ஜூலை 21ஆம் தேதி முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சோனியா பதிலளித்தார். மொத்தமாக 28 கேள்விகள் கேட்கப்பட்டன. அதேபோல, இன்றும் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவரும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடந்த ஜூன் 8ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சோனியாகாந்தி கரோனா காரணமாக, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டார். இதனால் ஜூன் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல, ராகுல்காந்தி வெளிநாட்டிலிருப்பதாக கூறி விலக்கு கேட்டார்.

இதனால், அவருக்கும் ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது. இதன்படி ராகுல்காந்தி ஜூன் 13ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...

ABOUT THE AUTHOR

...view details