டெல்லி:காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தநிலையில் இன்று (ஜூன் 12) டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள தகவலில், "காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்தநிலையில், இன்று கங்கா ராம் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.