தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்... என்ன காரணம் தெரியுமா? - ராகுல் காந்தி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sonia
Sonia

By

Published : Jul 18, 2023, 10:46 PM IST

போபால் : காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் மாதம் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூடி ஆலோனை நடத்தின. தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை. 17) இன்று (ஜூலை. 18) பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்டு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலுபிரசாத் யாதவ், தேசியவாத காங்கிர்ஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணியின் பெயர் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் சூட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். இவர்கள் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையும் படிங்க :தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தால் சோதிக்கப்பட்டது - பிரதர் மோடி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details