தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக நிர்வாகி சோனாலியின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் - இருவர் கைது - Sonalis brother Watan Dhaka

ஹரியானவைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக நிர்வாகி சோனாலியின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள்  -  இருவர் கைது
பாஜக நிர்வாகி சோனாலியின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் - இருவர் கைது

By

Published : Aug 25, 2022, 7:55 PM IST

ஹிசார் (ஹரியானா): கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக மகளிரணி நிர்வாகி சோனாலி போகத் உயிரிழந்தார். அவரது உடற்கூராய்வு முடிவில் உடலில் சில இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவரின் சகோதரர் வாட்டன் தாகா சோனாலியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியதையடுத்து பிஏ சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய இரு நபர்களை கோவா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சோனாலி போகத் மரணத்தை பிரிவு 302 (கொலை) இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ 42 வயதான சோனாலி போகத்தின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் ஆகஸ்ட் 22 அன்று போகட் கோவாவுக்கு வந்தபோது அவருடன் வந்த சுதிர் சக்வான் மற்றும் சுக்விந்தர் வாசி ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போகட்டின் சகோதரர் டாக்கா நேற்று (ஆகஸ்ட் 24) அஞ்சுனா காவல் நிலையத்தில் இந்த இரண்டு நபர்கள் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரையடுத்து இன்று கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போகட்டின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் அவரின் உடலில் சில காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுக்விந்தர் சமீப காலமாக பெரும்புள்ளி ஒருவரிடம் பணிபுரிந்ததாக சோனாலியின் சகோதரர் டாக்கா போலீஸாரிடம் கூறினார். இந்த பெரும்புள்ளியின் மேல் ஏற்கனவே ஒரு இளம்பெண்ணின் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக மகளிரணி நிர்வாகி சோனாலி போகட் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details