தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொய்களை மறைக்க நல்ல முயற்சி - உதயநிதிக்கு சோனாலி ஜேட்லி பதிலடி - Sonali Jaitley

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு உதயநிதி அளித்த விளக்கத்தை விமர்சித்து அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சோனாலி ஜெட்லி
சோனாலி ஜெட்லி

By

Published : Apr 7, 2021, 7:37 PM IST

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜேட்லியும், சுஷ்மா சுவராஜும், மனம் நொந்து இறந்ததாக கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது. சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் குறித்த எனது கருத்து, ஊடகத்தின் மூலம் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், தாராபுரத்தில் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ள அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி, "நல்ல முயற்சி. மோடி, அருண் ஜேட்லி ஆகியோருக்கு எதிரான உங்களின் பொய்கள் உண்மையை மறைப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட மோசமான முயற்சியை வெளிக்காட்டுகிறது.

பாஜகவில் யாரும் பிறக்கும்போதே தலைவராக பிறப்பதில்லை. தொண்டர்கள் எப்போதும் தங்களை பின்னுக்கு தள்ளி நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதை நீங்கள் ஒருநாள் புரிந்து கொள்வீர்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details