கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில், தனது தாயை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது வன்மத்தைத் தீர்த்துக் கொண்ட பின்னர், தனது தாயைக் கொலை செய்து சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் மகனே தாயைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 21 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரைக் கைது செய்தனர்.