தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தந்தை சுட்டு மூளைச்சாவு அடைந்த மகனின் உடலுறுப்பு தானம்! - son Brain Dead and his Parents Agreed To Donate Organs

கர்நாடகாவில் தந்தை தவறுதலாக சுட்டதில் மகன் மூளைச்சாவு அடைந்தான். இந்நிலையில், அவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய கடும் துக்கத்தின் மத்தியிலும் அவனுடைய பெற்றோர் ஒத்துக்கொண்டுள்ளனர்.

மங்களூரில் உடல் உறுப்பு தானம், mangalore, mangalore brain dead, Misfire By Father Leaving Son
மங்களூரில் உடல் உறுப்பு தானம், mangalore, mangalore brain dead, Misfire By Father Leaving Son

By

Published : Oct 6, 2021, 8:57 PM IST

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள போக்குவரத்து நிறுவனமான வைஷ்ணவி எக்ஸ்பிரஸ் கார்கோ பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர், நேற்று (அக். 5) தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து இரண்டு பணியாளர்களை சுட முயன்றுள்ளார்.

அப்போது, அவர் வைத்த குறி தவறி அங்கிருந்த அவருடைய 16 வயது மகன் சுதீந்திரா மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து, சிறுவன் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அச்சிறுவனுக்கு இன்று மூளைச்சாவு ஏற்பட்டது.

உடல் உறுப்பு தானம்

பெற்றோருடன் சிறுவன் சுதீந்திரா

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

ஒருவருக்கு தலையில் கடுமையாக அடிபட்டாலோ அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மூளைச்சாவு ஏற்பட்டு உடலின் செயல்பாடு முற்றிலும் தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விழிஞ்ஞம் ஹெராயின் கடத்தல் வழக்கு: இலங்கை தமிழரை கைது செய்த என்ஐஏ

ABOUT THE AUTHOR

...view details