மால்டா: மேற்கு வங்கம் மாநிலம், மால்டா மாவட்டம், ரத்துவா பகுதியைச்சேர்ந்தவர் முகமது பத்ருஜ்ஜோஹா(Mohammad Badrujjoha). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிராந்திய துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகன் முகமது பர்ஹத், ஒரு கையில் துப்பாக்கியுடனும் மற்றொரு கையில் செல்போனுடனும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கியுடன் முகமது பர்ஹத் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
சம்பவம் குறித்து பதிலளித்துள்ள முகமது பத்ருஜ்ஹோஹா, இது சதித் திட்டம் என்றும்; தனது மகனை கையில் துப்பாக்கியுடன் இருப்பதை யாரோ ஒருவர் வைரலாக்கியதாகும் தெரிவித்தார். இதனிடையே தலைமறைவான முகமது பர்ஹத் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர்களே முகமது பர்ஹத் துப்பாக்கியுடன் இருப்பதை ஒப்புக்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரது மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:தமிழறிஞர் ஔவை நடராசனுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - ஸ்டாலின்