ஜீவர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த ஹோரம் சிங்கின் மகன் மகேஷ் (30). இன்று காலை இவருடைய அறையிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தனர்.
அங்கு அவர் இறந்த நிலையில் கீழே கிடந்தார். அவரது உடலின் அருகில் துப்பாக்கி இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்தத் தற்கொலை தொடர்பாக விசாரித்துவருவதாக காவல் ஆய்வாளர் கோட்வாலி எம்.கே. உபத்யாய் கூறினார்.
உ.பி.யில் பாஜக மூத்தத் தலைவரின் மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! - தற்கொலை சம்பவம்
புலந்த்ஷாஹர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்தத் தலைவர் ஒருவரின் மகன் இன்று காலை (நவ. 14) துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![உ.பி.யில் பாஜக மூத்தத் தலைவரின் மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9544420-768-9544420-1605358288725.jpg)
suicide
இந்த விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் கிடைக்கப்பெறவில்லை எனவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.