தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்மார்ட் போன் வாங்க பணம் கொடுக்காதால் மகன் வெறிச்செயல் - நடந்தது என்ன? - நாக்பூர் போலீசார்

Nagpur: நாக்பூரில் ஸ்மார்ட் போன் வாங்க பணம் தரவில்லை என தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Nagpur
ஸ்மார்ட் போன் வாங்க பணம் கொடுக்காதால் மகன் வெறிச்செயல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 11:11 AM IST

நாக்பூர்: மகாரஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சந்த கஜானன் மகாராஜ் நகரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தவர், கமலாபாய் குலாப்ராவ் பத்வைக் (47). இவருக்கு ராம்நாத் குலாப்ராவ் பத்வைக் மற்றும் தீபக் பத்வைக் என 2 மகன்கள் உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணமான நிலையில், தனது மூத்த மகன் ராம்நாத் குலாப்ராவ் பத்வைக் (28) வீட்டில் தாயார் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தீபக்கை அவரது நண்பர் அழைத்து, உன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், தீபக் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். ஆனால் அதற்குள் தீபக்கின் மனைவி அவரை அழைத்து, அவரது தாய் மருத்துவமனையில் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது தாயை நேரில் சென்று பார்த்தபோது, கழுத்தில் காயமும், இடது கை கட்டைவிரலில் மை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் தனது தாய் அணிந்திருந்த நகைகளும் இல்லாததால், சந்தேகமடைந்த தீபக், தனது அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனைத் தொடந்து தீபக் அவரது சகோதரர் ராம்நாத்திடம் பல சந்தேகப்படும்படியான செயல்களையும் கவனித்ததாக கூறப்படுகிறது. அதனால் மேலும் சந்தேகமடைந்த தீபக், ஹட்கேஷ்வர் காவல் நிலையத்தில் தனது தாய் இறப்பில் தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும், தனது அண்ணன்தான் அதற்கு காரணமாக இருக்கும் எனவும் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், கமலாபாய் குலாப்ராவ் பத்வைக் மரணத்தை போலீசார் சந்தேகத்திற்கிடமான தீடீர் மரணம் என பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், மறுநாளான நேற்று (அக்.21) மருத்துவர்கள் அளித்த அறிக்கையின்படி, கமலாபாய் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கமலாபாயின் மூத்த மகன் ராம்நாத் பத்வைக்கை பிடித்து விசாரித்தபோது, முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த கமலாபாய்க்கும், குற்றம் சுமத்தப்பட்ட ராம்நாத்துக்கும் இடையே ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக பணம் கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, தாய் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ராம்நாத், தனது தாயின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாகவும் நாக்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது ராம்நாத் குலாப்ராவ் பத்வைக்கை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து; ஓட்டுநரின் லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து!

ABOUT THE AUTHOR

...view details