அனேகல்: கரோனா இரண்டாம் அலை காரணமாக முறையான சிகிச்சை கிடைக்காததால் சில மருத்துவமனைகளில் பலர் உயிரிழந்துவருகின்றனர்.
இதுபோன்ற நிலை பல மாநிலங்களில் நிலவிவருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பெங்களூரு ஆக்ஸ்போர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகனை மருத்துவமனையில் அனுமதித்ததிலிருந்து அவரைப் பற்றி எந்தத் தகவலும் மருத்துவமனை சார்பில் அவரது தாய்க்கு கொடுக்கப்படவில்லை.
ஆகவே, கடந்த ஒரு வாரமாக தாய் தனது மகனைக் காண மருத்துவமனைக்கு வெளியே கண்ணீருடன் காத்திருந்தார். இதற்கிடையில், மகன் நேற்று (ஏப். 23) மருத்துவமனை அவரைக் கொன்றுவிடுவதாகக் கூறி ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையை விட்டு வெளியேற தயாரான நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக ஆக்ஸ்போர்டு மருத்துவமனையின் அலட்சியம் குறித்து பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.