ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குடிபாடு கிராமத்தில் நபர் ஒருவர் தன்னைக் கேட்காமல் வீட்டில் கழிவறை கட்ட பள்ளம் தோண்டிய தாயை, தனது தாய் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதனைத்தடுக்க வந்த உறவினர்களையும் மிரட்டி, தன் தாயை தாக்கி கழிவறைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தள்ளியுள்ளார். இதனால் கோபமடைந்த தாய் தன் மகனிடமிருந்து தன்னைக்காக்குமாறு கோரிக்கை வைத்து அந்த குழிக்குள் அமர்ந்து போராட்டம் செய்துள்ளார்.