தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாயைக்கொலை செய்துவிட்டு தந்தை மீது பழி போட முயன்ற மகன் கைது - போலீஸ் விசாரணை

காஷ்மீரில் தாயைக்கொலை செய்த இளைஞர், தனது தந்தை மீதும் அவரது உறவினர்கள் மீது பழி சுமத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயைக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Why
Why

By

Published : Nov 2, 2022, 7:58 PM IST

அனந்த்நாக்: காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கெஹ்ரிபால் கிராமத்தில், கடந்த வாரம் ரசியா அக்தர்(45) என்ற பெண்மணி வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இறந்த பெண்மணி விவாகரத்தானவர். அவரது கணவருக்கு மறுமணம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தனது தாயார் தவறி விழுந்து இறக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ரசியாவின் மகன் அகிப் மன்சூர் கான் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அகிப் மன்சூர் கானிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரசியாவின் மகன் அகிப் மன்சூர் கான், அவரது நண்பர் அபித் ஹுசைன் உதவியுடன் தாயைக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சமையலறையில் தாயிடம் பணத்தைப்பறிக்க முயன்றபோது, ஏற்பட்ட கை கலப்பில் தாயை தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மாடியில் இருந்து விழுந்ததுபோல வெளியில் நாடகமாடியதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் இது கொலை எனப் புகாரளித்து, தாயைப் பிரிந்த தந்தை மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பழி போட திட்டமிட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைக் கைப்பற்றிய போலீசார், அகிப் மன்சூர் கானையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:தன்பாலின சேர்க்கை விவகாரம்... கொலையை மறைக்க தற்கொலை நாடகமாடிய நண்பர்கள்..

ABOUT THE AUTHOR

...view details