டெல்லி:குடியரசுத் தலைவர் மாளிகையில் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று (நவ.9) நடைபெற்றது. இந்தாண்டு 119 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்தாண்டு 7 பேர் பத்ம விபூஷண், 10 பேர் பத்ம பூஷண், 102 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர். மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை, அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்.