கேரளாவை அதிர வைத்த சோலார் பேனல் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சரிதா நாயர் கோழிக்கோடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவருக்கு அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோலார் பேனால் வைத்துக்கொடுப்பதாகக் கூறி, அவரிடம் ரூ.42.7 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக சரிதா மீது அப்துல் குற்றஞ்சாட்டினார்.
இம்முறைகேடு புகார் மீதான வழக்கை கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் விசாரித்தது. இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகக் கூறி கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் வாரண்ட் விதித்தது.
நீதிமன்ற வாரண்டை மதித்து சரிதா நேரில் ஆஜராகாத நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சோலார் பேனல் முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோரின் மீதும் புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.