ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நாவலுருவை சேர்ந்த ஜஸ்தி ஸ்வேதா சவுத்ரி(22) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அதிகாலையில் தனது பெற்றோருடன் ஹைதராபாத் புறப்பட இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், ஸ்வேதா அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின்னர் 8 மணியளவில் தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் சில்லகல்லு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சில்லகல்லு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 10 மணியளவில், ஸ்வேதாவை சடலமாக மீட்டனர்.