தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் முக்கிய மாற்றம் - அரசு பரிந்துரை - small amount of drugs for personal use

தனி நபர்கள் தனது சொந்த பயன்பாட்டிற்காக மிகக்குறைந்தளவிலான போதைப்பொருளை வைத்துக்கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டாம் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

drugs for personal use
drugs for personal use

By

Published : Oct 25, 2021, 4:15 PM IST

போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை வருவாய் துறைக்கு அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் தனது சொந்த பயன்பாட்டிற்காக மிகக்குறைந்தளவிலான போதைப்பொருளை வைத்துக்கொள்ளவதை கிரிமினல் குற்றமாக கருதி பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், குறைந்த அளவிலான போதைப்பொருளுடன் சிக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

அவ்வாறு சிக்கும் நபர்களுக்கு அரசு மையங்களில் சிகிச்சை அளிக்கவும் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. போதைப்பொருள் சட்டப்பிரிவு 27இன் படி போதைப்பொருள் வைத்திருப்பது கிரிமினல் குற்றமாகும். இதற்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். அன்மையில் இந்தப் பிரிவில் குற்றஞ்சாட்டப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!

ABOUT THE AUTHOR

...view details