தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு... கிச்சடி சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! - சத்துணவில் செத்துக் கிடந்த பாம்பு

பீகாரில் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவில் பாம்பு இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bihar food
பீகார் உணவு

By

Published : May 27, 2023, 5:25 PM IST

அரைரா: பீகார் மாநிலம் அமோயுனா பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இன்று (மே 27) காலை வழக்கம் போல், பள்ளியில் கிச்சடி விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கிச்சடியில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவன் அலறியுள்ளான்.

அதற்குள் கிச்சடி சாப்பிட்ட பிற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவ, மாணவிகளை மீட்டு போர்ப்ஸ்கஞ்ச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் பள்ளி முன் திரண்டனர். பள்ளி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தலைமை ஆசிரியரை தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களை சமரசம் செய்த போலீசார் மற்றும் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பள்ளியில் தயாரிக்கப்படவில்லை. உணவு தயாரிக்கும் பொறுப்பு தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வெளியிடத்தில் தயார் செய்யப்பட்டு பள்ளிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் உணவில் பாம்பு இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுவது வெறும் வதந்தி. 25 மாணவர்களுக்கு மட்டுமே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உடல்நிலைக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்புவார்கள்" என கூறினர்.

கடந்த 18ம் தேதி சரண் மாவட்டம் தும்ரி பகுதியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில், பள்ளி இறந்து கிடந்தது. அதை சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த பள்ளிக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உணவு விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சித்தப்பா கொலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பா? சிபிஐ கொடுத்த ஷாக்!

ABOUT THE AUTHOR

...view details