தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீயா படம் போல் வஞ்சம் தீர்க்கிறதா பாம்புகள் - கர்நாடகாவில் வினோத சம்பவம்! - கர்நாடாக ஹனுமசாகராவில் பாம்பு கடி

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பாம்புகள் தொடர்ச்சியாக கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Snake-Family
Snake-Family

By

Published : May 14, 2021, 9:24 AM IST

Updated : May 14, 2021, 12:39 PM IST

கர்நாடக மாநிலம், ஹனமசாகர் கிராமத்தைச் சேரந்தவர் நிர்மலா. இவர், கடந்த திங்கள்கிழமை (மே.11) இரவு பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். ஆத்திரத்தில் இவரது குடும்பத்தினர் அந்த பாம்பைத் தேடிப் பிடித்து கொன்றுள்ளனர்.

மறுநாள் இரவு அதே குடும்பத்தைச் சேர்ந்த பசவராஜா பீர்ப்பா, ஷகரானப்பா என்ற இருவரை பாம்புக் குட்டிகள் கடித்துள்ளன. இதையடுத்து அந்த இருவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உடனடியாக அரசு அலுவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்று மீதமுள்ள நபர்களை வேறு இடத்துக்கு மாற்றினர்.

வீட்டில் வேறு எங்கும் பாம்புகள் இருக்கிறதா என தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், பாம்பைக் கொன்றதற்கு வஞ்சம் தீர்க்கவே பாம்புக் குட்டிகள் அவர்களை கொத்தியதாக கருதுகின்றனர்.

Last Updated : May 14, 2021, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details