ஜஜ்பூர்:ஒடிசா மாநிலம், ஜஜ்பூர் மாவட்டத்தில் ஷாலிஜங்கா அருகேயுள்ள கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிஷோர் பத்ரா.
இவர் விவசாய வேலையை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்தது. வலியால் துடித்த பத்ரா விறுவிறுவென சென்று தன்னை கடித்த பாம்பை தேடினார்.