டெல்லி: ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவர் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிவேற்றி இருந்தார்.
அந்தப் படம் தற்போது வைரலாகிவருகிறது.
அந்தப் படத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுடிதார் அணிந்துகொண்டு பூ பறித்துக்கொண்டிருக்கிறார். அவரின் கைகள் பூவை தொடுகின்றன.
இந்தப் படங்களை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஏனெனில் அவர் புகைப்படத்தில் மெலிந்த தேகத்துடன் காணப்படுகிறார்.