தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ஜெய் ஶ்ரீராம்" என்ற முழக்கம்... கடுப்பான மம்தா - விழா மேடைக்கு செல்ல மறுப்பு - பாஜக ஆதரவாளர்களால் மம்தா அதிருப்தி

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில், பாஜக ஆதரவாளர்கள் "ஜெய் ஶ்ரீராம்" என்று முழக்கமிட்டதால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்தார்.

Sloganeering
Sloganeering

By

Published : Dec 30, 2022, 5:17 PM IST

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று காலமானார். தாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக ஹவுராவுக்கு வந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து காணொலி மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் மம்தா பானர்ஜி ரயில்வே நடைமேடைக்கு வந்தபோது, அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர் "ஜெய் ஶ்ரீராம்" என்று முழக்கமிட்டனர். மம்தாவை நோக்கி அவர்கள் சத்தமாக கோஷமிட்டதால், எரிச்சலடைந்த அவர் அங்கிருந்து புறப்பட முயன்றார்.

அப்போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இருவரும் மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்தி நிகழ்ச்சி மேடைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர்.

ஆனால், அவர் மேடைக்குச் செல்ல மறுத்துவிட்டார். பின்னர், மேடைக்கு அருகில் பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். பாஜக ஆதரவாளர்களின் செயலால் மம்தா பானர்ஜி மிகுந்த அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்த கைகோடு கடமையாற்ற விரைந்த பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details