தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் தீ விபத்து; இருவர் உயிரிழப்பு - பலர் படுகாயம்! - டெல்லி விபத்து

Delhi Sleeper Bus fire accident: டெல்லி குருகிராமில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 1:16 PM IST

குருகிராம்: டெல்லி - குருகிராம் நெடுஞ்சாலையில் நேற்று (நவ.8) இரவு வந்து கொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து (Sleeper Bus) திடீரென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, பேருந்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்களில் இருவர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 5 பேர் மேதாந்தா மருத்துவமனையிலும், இதர படுகாயம் அடைந்தவர்கள் சிவில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்த அனைவரும் 30 முதல் 50 சதவீத அளவிலான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் மற்றும் குருகிராம் காவல் ஆணையர் விகாஷ் குமார் அரோரா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஜார்ஷா மேம்பாலத்துக்கு அருகில், நேற்று இரவு 8.30 மணியளவில் பேருந்து தீ விபத்து குறித்து முதல் தகவல் வந்ததாக, மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இறந்த சகோதரி உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சகோதரர்..! ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த அவலம்..

ABOUT THE AUTHOR

...view details