நியூயார்க்: சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான புலிட்சர் விருது நான்கு இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞரான டேனிஷ் சித்திக் மற்றும் அவருடன் பணியாற்றிய மற்ற புகைப்பட கலைஞர்களான அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ மற்றும் அமித் டேவ் ஆகியோர் பெற உள்ளனர்.
இந்தியாவில் ஏற்பட்ட கரோனா உயிரிழப்புகளை ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் ஊழியர்களான இவர்கள் எடுத்த புகைபடங்கள் பார்வையாளர்களுக்கு உணர்வை கடத்தும் வகையிலும், கரோனாவால் ஏற்பட்ட பேரழிவுகளை எளிதில் கடத்தும் வகையில் இருந்ததால் இவை உடனடி செய்தி தளங்களில் இருந்து நடுவர்கள் மாற்றியுள்ளனர். இதன் மூலம் சிறந்த புகைபடங்களுக்கான புலிட்சர் விருது வழங்கப்படுகிறது.
டேனிஷ் சித்திக்கிற்கு இரண்டாவது புலிட்சர்:டேனிஷ் சித்திக்கிற்கு இது இரண்டாவது புலிட்சர் விருது ஆகும். முன்னதாக 2018 ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ரோஹினியா வன்முறை குறித்த புகைபடங்களுக்காக புலிட்சர் விருது பெற்றிருந்தார். டேனிஷ் ஆப்கானிஸ்தான் தாக்குதல், ஹாங்காங் போராட்டங்கள் மற்றும் ஆசியாவில் நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்தின் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கும், தாலிபான்களுக்கும் இடையேயான மோதலை புகைப்படம் எடுக்க சென்ற போது கடந்த ஆண்டு ஜூலை அங்கு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். டேனிஷ் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தாலிபான்கள் தாக்குதலில் டேனிஷ் கொல்லப்பட்டாரா என தாலிபான்களும் அறியவில்லை என அவர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்" எலான் மஸ்க் பகீர் ட்வீட்