காசியாபாத் (உத்தரபிரதேசம்):காசியாபாத்தில் செல்போன் உபயோகிக்கச் சொல்லித் தருவதாகக் கூறி 6ஆம் வகுப்பு மாணவியை இரண்டும் மாதமாகத் தொடர் பாலியல் தொல்லை செய்த பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நாகல் கிராமத்தை சேந்த சிறுமி, தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமி, அதிக நேரம் தனிமையாக இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் செயல்பாடுகளில் மாற்றம் இருந்ததையும், பள்ளி முடிந்து நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புவதையும் கவனித்த பெற்றோர் அதுகுறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர்.
பள்ளி முடிந்ததும் வீடு திரும்பும் தன்னை பள்ளி முதல்வர் மறித்து நிறுத்தி செல்போன் இயக்கச் சொல்லித் தருவதாக அழைத்துச் சென்று ஆபாச காணொளிகளைக் காண்பித்து பாலியல் தொல்லை அளித்ததாகச் சிறுமி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால், அதே பள்ளியில் படிக்கும் சிறுமியின், சகோதரன் மற்றும் சகோதரியைக் கொன்று கால்வாயில் வீசிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயதான பள்ளி முதல்வர் சஹாதத் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க:சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி