ஹோசியர்பூர் (பஞ்சாப்): பஞ்சாப் ஹோசியர்பூர் மாவட்டம் பெஹ்ராம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஹிரிதிக் என்ற 6 வயது சிறுவன் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சில நாய்கள் அவனை துரத்தியதாக கூறப்படுகிறது.
அவற்றிடம் இருந்து தப்பிக்க சிறுவன் ஓட்டம் பிடித்தபோது, சணல் பையினால் மூடப்பட்டிருந்த ஆள்துளைக் கிணற்றின் முகப்பில் கால் வைத்துள்ளான். ஆனால் சணல் பையுடன் சேர்ந்து சிறுவன், 300 அடி ஆழ ஆள்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதையடுத்து அங்கு தேசியப் பேரிடர் படையினர் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
300 அடி ஆழ்துளை கிணற்றுள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு துளை வழியாக கேமாராவை உள்ளே செலுத்தி சிறுவனின் நிலை குறித்து ஆராய்ந்தனர். மேலும், தொடர்ந்து பைப் வழியாக ஆக்ஸிஜனும் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. இந்நிலையில், 7 முதல் 8 மணிநேரம் நடைபெற்ற மீட்புப் பணி நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.
அவனை பரிசோதித்த மருத்துவர்கள்,"ஹிரிதிக்கை மருத்துவமனை கொண்டுவந்தபோது அவனது உடல் மிகவும் விறைப்பாக இருந்தது. அவருக்கு வென்டிலெட்டரில் சிகிச்சை அளித்தும் அவனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவன் மீட்பதற்கு அரைமணி நேரம் முன்பு அவன் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம்" என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சார்தாம் யாத்திரை: இதுவரை 57 பக்தர்கள் உயிரிழப்பு