தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாய்களிடம் தப்பி 300 அடி ஆழ ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் - பஞ்சாபில் பரபரப்பு! - ஆள்துளை கிணறு

பஞ்சாப் மாநிலத்தில் நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்த சிறுவன் தவறுதலாக 300 அடி ஆழ ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்
பஞ்சாப்

By

Published : May 22, 2022, 5:47 PM IST

பஞ்சாப்,ஹோசியர்பூர்: பஞ்சாப் மாநிலம் , ஹோசியர்பூர் மாவட்டம் பெஹ்ராம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஹிரிதிக் என்ற 6 வயது சிறுவன் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சில நாய்கள் அவனை துரத்தியதாக கூறப்படுகிறது.

அவற்றிடம் இருந்து தப்பிக்க சிறுவன் ஓட்டம் பிடித்தபோது, சணல் பையினால் மூடப்பட்டிருந்த ஆள்துளைக் கிணற்றின் முகப்பில் கால் வைத்துள்ளான். எடை காரணமாக சணல் பையுடன் சேர்ந்து சிறுவன் 300 அடி ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அலுவலர்கள், போலீசார் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு தேசியப் பேரிடர் படையினரும் விரைந்துள்ளனர். சிறுவன் 100 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவன் மயக்கமடையாமல் இருக்க ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்துக்குக் காரணம் என்ன? - அடுத்தடுத்து அம்பலமான விதிமீறல்கள்!

ABOUT THE AUTHOR

...view details