ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கவாதிகள் உடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து குல்காம் போலீசார் தரப்பில், மிர்ஹாமா மற்றும் தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கும், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க:பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடங்களுக்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டோம். அந்த சோதனையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 1 பிஸ்டல், 1 பிஸ்டல் மேகசின், 18 பிஸ்டல் ரவுண்டுகள், 1 கையெறி குண்டு, 4 UBGL ரக குண்டுகள், 30 ஏகே 47 ரவுண்டுகள், 446 M4 ரவுண்டுகள், 8 M4 மேகசின், 1 ஏகே 47 மேகசின் பறிமுதல் செய்யப்பட்டன.