தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க ரயில் விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 45 பேர் படுகாயம் - ரயில் தடம்புரண்டு விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் கவுகாத்தி - பிகானர் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க ரயில் விபத்து
மேற்கு வங்க ரயில் விபத்து

By

Published : Jan 14, 2022, 7:27 AM IST

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே கவுகாத்தி-பிகானர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 12 பெட்டிகள் தடம் சேதமடைந்தன.

தகவலறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட தகவலில், 3 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வடகிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கவுகாத்தி-பிகானர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவர்களின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் கோர விபத்து - மூவர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details