ஜான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் ஜலல்பூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட திரிலோச்சன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு - உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு
![உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10552610-thumbnail-3x2-up.jpg)
08:39 February 09
07:48 February 09
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
வாராணாசியில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு உறவினர்கள் குழு ஒன்று மீண்டும் ஜான்பூரில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது, இவர்கள் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம் (பிக்கப்) திரிலோச்சன் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். இந்தத் தகவலை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
இறந்தவர்கள் அனைவரின் உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்த காவல் துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.