சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் ஆறு நக்சல்களில் ஐந்து பேரை பிடித்து கொடுத்தால் 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டு தம்பதிகள் உட்பட ஆறு நக்சல்கள் தாந்தேவாடா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து காவல் துறையினரின் மறுவாழ்வு இயக்கம் மூலம் மீட்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.
சரணடைந்த இரண்டு தம்பதிகள் தங்களது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இவர்கள் 2007இல் சத்தீஸ்கரில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.