திஸ்பூர்:அஸ்ஸாமின் பார்பேட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா நேற்று (ஏப். 16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூறிய அவர், "இந்திய துணைக்கண்டத்தின் அல்-கெய்தா (AQIS) என்னும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்
அவர்கள் முஃப்தி சிலைமான், ஜெஹிதுல் இஸ்லாம், சதான் ஹூசைன், ரஷிதுல் இஸ்லாம், முஷரஃப் ஹூசைன், மஹிபூல் இஸ்லாம் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டார்கள்.