தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடித்து 6 பேர் உயிரிழப்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.

six-killed-more-than-10-injured-in-himachal-cracker-factory-blast
six-killed-more-than-10-injured-in-himachal-cracker-factory-blast

By

Published : Feb 22, 2022, 5:06 PM IST

சிம்லா:ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று(பிப்.22) வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பெண் உள்பட 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், இந்த விபத்து காலை 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ஆலையிலிருந்து பெரும் வெடிச்சத்தம் கேட்ட பின்னர் மக்கள் ஓடி சென்று பார்த்தப்போது, 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. முதல்கட்ட தகவலில், உரிமம் இல்லாமல் பட்டாசு ஆலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்களை தெரிவிக்கிறேன். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வெடி விபத்தில் நால்வர் உயிரிழப்பு: பட்டாசு தொழிற்சாலை உரிமத்தை ரத்து செய்த ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details