டெல்லி : வடமேற்கு டெல்லியின் பிரதம்பூரா பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிதம்பூரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீட்டில் சிக்கி இருந்த 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் 4 பெண்கள் உள்பட 6 பேர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். குடியிருப்பில் தீ பற்றியதற்கான காரணம் தெரியவராத நிலையில் எப்படி தீ பற்றியது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.