கிருஷ்ணா:ஆந்திரப் பிரதேசம், நஸ்விட் பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று (மார்ச்.14) அதிகாலை ஆட்டோ ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதம் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : ஆறு பேர் பலி - ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம், நஸ்விட் பகுதியில், ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை அடுத்து, உயர் சிகிச்சைக்காக அவர்கள் விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில், சட்டப்பிரிவு 304இன் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டும், லாரி ஓட்டுநரைத் தேடியும் வருகின்றனர்.