மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை ஆறு கோவிட்-19 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்றிரவு முதல் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அதன் விளைவாகத்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த நோயளிகளின் உறவினர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இதுபோன்ற தொடர் மரணங்கள் நிகழ்ந்துவருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12,918 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 5,041ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோக்கு இரண்டாவது முறை கோவிட்-19 பாதிப்பு