டெல்லி: மக்களவை விவாத கூட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா இந்தியாவில் ஆளும் பாஜக அரசுதான் ’பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. தற்போது யார் உண்மையான பப்பு எனத் தெரியவந்துள்ளது எனவும், இந்தியா பொருளாதர மற்றும் தொழில்துறையில் பெரும் சரிவை கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். முன்னதாக பாஜக அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்து இருந்தது. இதனையடுத்தே இச்சொல் மக்களவையில் பல கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்து பேசிய போது, ‘சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு மாநிலம் அமைதியாக இருந்தபோதும், கிழக்குப் பகுதியில் பாஜக கட்சித் தொண்டர்கள் வீடுகளில் “கொள்ளை, பலாத்காரம் மற்றும் தீ வைப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றது” எனக் கூறினார்.