ஃபரிதாபாத்:கடந்த 26ஆம் தேதி கல்லூரியில் தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி நிகிதா தோமரை (31) வழிமறித்த இருவர், அவரை இஸ்லாம் மதத்துக்கு மாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே அவரை மிரட்டிய இருவரில் ஒருவர் தான் எடுத்து வந்த துப்பாக்கியால் மாணவியை சுட்டுக் கொன்றார்.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இது தொடர்பான மிரள வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் மிர்சாபூர் 2 வெப்சீரிஸ் வரும் கதாபாத்திரத்தைப் பார்த்தே தான் இவ்வாறு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நிகிதா தோமர் வழக்கில் வெளியான சிசிடிவி காட்சி இந்நிலையில், சிறப்புப் புலனாய்வு குழுவினர் இந்த கொலை சம்பவம் குறித்த 600 பக்க குற்றப்பத்திரிகையை 11 நாள்களுக்குள் தயாரித்துள்ளது. இதனை ஹரியானா காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளாக மூன்று பேர் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், 25 பேரிடமிருந்து உறுதியான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணமாக சிசிடிவி காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி, கையில் வைத்திருந்த பவுடர், குற்ற சம்பவத்தின்போது பயன்படுத்திய கார் உள்ளிட்டவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை இன்று மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு நேற்று சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (நவ. 06) நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கொலை விவகாரம் - மிர்சாபூர் வெப்சீரிஸ் தயாரிப்பாளர்களை சாடிய கங்கனா