ஜார்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத் தலைமையகமான சாய்பாசாவில் உள்ள புரானா விமான நிலையம் அருகே பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் விசாரணைக்காக எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை எஸ்ஐடி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினீயரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் காவல் துறையினர் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்ஐடியும் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.
இந்த குழுவை சாய்பாசா டிஎஸ்பி திலீப் கல்கோ மற்றும் ஜெகநாத்பூர் டிஎஸ்பி இகுட் டுங்டுங் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இது குறித்து மேற்கு சிங்பூம் எஸ்பி அசுதோஷ் சேகர் கூறுகையில், “குற்றம் செய்தவர்களைக் கைது செய்ய தொழில்நுட்பப் பிரிவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, குற்றவாளிகளை பிடிப்பதற்காக, காவல் துறையினர் ஒவ்வொரு கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிலரை காவலில் எடுத்து விசாரித்து வருவதால், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க உதவ முடியும் என காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை: