கேரளாவின் கோட்டயத்தில் உள்ள கான்வென்ட் பள்ளி ஒன்றில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா, சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி சேப்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு குற்றம் நிரூபணம்: சிபிஐ நீதிமன்றம்! - பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி சேப்பி
கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Sister Abhaya Case
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கியது. அதில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி சேப்பி ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இருவரும் குற்றவாளிகள் என்றும், இவர்களுக்கான தண்டனை விவரம் என்ன என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையும் படிங்க:29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...