தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்யாணம் ஆகாமல் இரட்டை குழந்தைக்கு தாய்.. சூரத் பெண்ணின் துணிச்சல் முடிவு! - Single mother in IVF

சூரத்தை சேர்ந்த 40 வயதான பெண் திருமணம் செய்து கொள்ளாமல் செயற்கை கருத்தரித்தல் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

ஐவிஎப்
ஐவிஎப்

By

Published : Dec 17, 2022, 6:07 PM IST

சூரத்:குஜராத் மாநிலம், சூரத் அடுத்த நான்புரா பகுதியைச் சேர்ந்தவர் டிம்பிள் தேசாய். பொறியாளரான டிம்பிள் தேசாய், பெற்றோருடன் வசித்து வருகிறார். டிம்பிள் தேசாயின் அக்கா ரூபா தேசாய் துபாயில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் பணியாற்றி வருகிறார். தன் இரு மகள்களுக்கும் வரன் பார்க்கும் முயற்சியில் அவர்களது பெற்றோர் ஈடுபட்டனர்.

திருமணத்தில் நாட்டமில்லாத டிம்பிள் தேசாய், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என கனவுடன் இருந்துள்ளார். இதன் காரணமாக உள்ளூர் மருத்துவமனையை அணுகிய அவருக்கு ஐ.வி.எஃப்(IVF) எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல் இரு முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முயற்சியில் டிம்பிள் கருவுற்றார். 42 வயது டிம்பிள் தேசாய் தற்போது ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என இரட்டை குழந்தைகளுக்கு டிம்பிள் தாயாகியுள்ளார்.

இதையும் படிங்க:அரசு வாகனத்தை அசால்டாக திருடிய பிச்சைக்காரர் கைது

ABOUT THE AUTHOR

...view details